Friday, January 17, 2014

சமத்துவப் பொங்கல்

பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு முடிந்துள்ள இவ்வேளையில் சிலர் சமத்துவப் பொங்கல் எதற்கு ? என்று வினவுகின்றனர்.

அறுவடைத் திருநாள் அனைத்து தமிழ் மக்களுக்கும் பொதுவான ஒன்று, ஆனால் இங்கு இருக்கும் பார்ப்பனர்கள் அதற்கும் ஒரு அறிவில்லா புராண கதை கட்டிவிட்டு இது ஏதோ இந்துக்களுக்கு மட்டும் உரிய பண்டிகை போன்று செய்து விட்டான்...

இதனை வேரறுக்க சமத்துவப் பொங்கல் தேவைப்படுகின்றது.

அண்டை மாநிலமான கேரளாவில் ஓணம் என்ற அறுவடைத் திருநாளை அணைத்து மலையாளிகளும் மதம் துறந்து கொண்டாடுகின்றனர் . அங்கும் பார்ப்பான் கட்டிய புனைவு கதை உள்ளது ஆனால் அவர்கள் அறுவடைத் திருநாள் அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒன்று என்று தெளிந்து இருக்கின்றனர்.

Wednesday, May 16, 2012

ஆகா எப்படிப்பட்ட வெங்கட்ராமன்?

கேள்வி: ஜனாதிபதி பதவியி லிருந்து ஓய்வு பெற்ற பின், தாம் வசிப்பதற்காக அரசு ஒதுக்கிய வீட்டை வேண்டாம் என்று கூறிவிட்ட ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் தியாகம் மெச்சத் தகுந்ததுதானே? பதில்: என்ன இப்படி சர்வ சாதார ணமாகக் கேட்டு விட்டீர்கள்? பிரதிபா பாட்டீல் எவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்திருக்கிறார்? இந்த மாதிரி தியாகத்தை நாடு கேள்விப்பட்டதுண்டா? அவரை இப்படி வெறுமனே - ஒரு கேள்வி பதிலில் பாராட்டி விட்டு விடலாமா? ரொம்பத் தப்பு; மிகப் பெரிய பாராட்டு விழா நடத்தி, அதில் மக்கள் பரிசாக, அவர் விரும்பி ஆசைப்பட்டதை அவருக்கு ஒதுக்கித் தர வேண்டும். அந்தத் தியாகி அதை பெற்றுக் கொள் வார். அப்போது அந்த தியாகம் முழுமையடையும். - துக்ளக் 16.5.2012 குடியரசுத் தலைவராக பிரதிபா பாட்டில் பதவி ஏற்ப தற்கு முன்பாகவே அவர் பெண் என்பதால், துக்ளக் சோ, ராமசாமிக்கே உரித்தான மனு தர்மப் புத்தியோடு கேலியும், கிண்டலும் செய்தே வந்திருக் கிறார் என்பது வெளிப்படை. இப்பொழுது அவருக்காக ஒதுக்கிய வீட்டை வேண்டாம் என்று சொன்னதை வைத்து அற்பத்தனமான முறையில் கேலி செய்து எழுதியுள்ளார். இதே இதழில் தலையங் கத்தில் குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமனை இந்திரன் சந்திரன் என்றும் புகழ்ந்து தள்ளியுள்ளார். ஒரு செய்தி தெரியுமா? பிரதீபா பாட்டில் குடியேற விரும்பிய வீடு சம்பந்தமாகக் கேலி செய்கிறாரே - இவர் போற்றும் திருவாளர் ஆர். வெங்கட்ராமனின் யோக் கியதை என்ன தெரியுமா? அவருக்கு சென்னை கோட்டூர்புரத்தில் காந்தி மண்டபம் சாலையில் (கதவு எண் 41,42) இரண்டு பங் களாக்களும், சென்னை முருகப்பா சாலையும் காந்தி மண்டபமும் சந்திக்கும் இடத் தில் (கதவு எண் 7) ஒரு பங் களா ஆக மூன்று பங்களாக் கள் இருந்தும், அவற்றையெல் லாம் கொழுத்த தொகையில் வாடகைக்கு விட்டு அரசாங்க பங்களாவில் தங்கிய பெரிய மனுஷன் தான் திருவாளர் சோ அய்யர் போற்றும் திருவா ளர் ஆர். வெங்கட் ராமய்யர். அரசுப் பங்களாவில் அவர் குடியிருப்பதற்காக ரூபாய் 75 லட்சம் செலவில் அவர் குடியேற விரும்பிய பங்களா புதுப்பிக்கவும் பட்டது என்றால் அவாளின் யோக்கியதாம்சத் தைத் தெரிந்து கொள்ளலாமே! குமுதம் 20.6.1996 பங் களாக்களின் படங்களைப் போட்டு அம்பலப்படுத்தியிருந் ததே. வெங்கட்ராமனை எதிர்த்து மறியல் செய்த திராவிடர் கழகத் தோழர்கள் கைது செய்யப் பட்டனர் என்பதையும் நினைவூட்டுகிறோம். அந்தக் காலகட்டத்தில் ஆர்.வெங் கட்ராமனின் இந்தமுறைகேடு பற்றி ஒரு வரி எழுதியதுண்டா சோ? மனுதர்மப் புத்தி எந்த அளவுக்குச் சோவுக்குப் புரை ஏறியிருக்கிறது பார்த்தீர்களா? அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தி குடியரசு தலைவராக இந்த ஆர். வெங்கட்ராமனின் மகள், குடியரசு தலைவர் மாளிகையைப் பயன்படுத்தி - நன்கொடை வசூல் செய்தது எல்லாம் மறந்து போயிற்றா? ஆர். வெங்கட்ராமன் பதவி யிலிருந்து விடுபட்ட நிலையில் அற்பம் சால்வைகளை எல் லாம்கூட அள்ளிக் கொண்டு வந்தவர் அவரின் பாரியாள் என்பது மற்றொரு கொசுரு தகவல்! கண்ணாடி வீட்டிலி ருந்து கல்லெறிய வேண்டாம் சோ ராமசாமி அய்யர்கள்!

Thursday, May 10, 2012

ஆரிய வித்து தேடி அலையும் ஹிட்லர் வாரிசுகள்! அதிர்ச்சியூட்டும் ஆதாரங்கள்- - ச.மா.இளவரசன் ‍


உலக வரலாற்றில் ஓர்ஆச்சரியமான இணைமுரண் உண்டு. மிகச் சிறிய இனமாக இருந்தாலும், உலகெங்கும் உள்ள அதிகார மய்யங்களில் பரவி, நுழைந்து அதன் உச்சியை எட்டி, ஆட்டிப் படைப்பவர்கள் யூதர்கள். தங்களைத் தொடர்ந்து அத்தளத்தில் இறுத்திக் கொள்ளவும் சரியான நகர்வுகளைச் செய்பவர்கள். அரசியல், அதிகாரம், கலை, இலக்கியம் போன்ற அனைத்துத் துறைகளின் மூலம் தங்கள் ஆதிக்கத்தை உலகம் முழுவதும் வைத்திருப்பவர்கள். இதே பண்பு நலன்களைக் கொண்ட மற்றோர் இனம் உண்டென்றால் அது சர்வ நிச்சயமாக இந்தியாவில் இருக்கும் ஆரிய இனம் தான்; பார்ப்பனர்கள் தான். இவ்விரு இனத்தினைக் கூர்ந்து நோக்குபவர்களுக்கு இவ்வுண்மை புலப்படும். சரி இது இணை! முரண் என்ன? உலகின் உயர்ந்த இனம் என் ஆரிய இனம் தான் என்று நெஞ்சு நிமிர்த்திய ஹிட்லர் தான் யூத இனத்தைப் பூண்டோடு தன் நாட்டிலிருந்தும் தான் பிடிக்கும் நாட்டிலிருந்தும் அழிக்க முனைந்தவன் என்பது தான் அந்த முரண்! மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கிளம்பிய ஆரியர்கள், கைபர், போலன் கணவாய்களின் வழியாக இந்தியா வந்தார்கள். பிறகு இந்தியப் பெருநிலமெங்கும் பரவினார்கள். இந்தியாவின் அதிகாரங்களில் மதத்தின் வாயிலாகவும், பண்பாட்டு வாயிலாகவும் ஆதிக்கத்தைச் செலுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள். இப்படி நாம் சொல்லத் தொடங்கினால்... சேச்சே... ஆரியர்களாம்... கணவாய்களாம்... சுத்த பேத்தல்... ஆர்யன இன்வேஷன் தியரி இஸ் எ மித்-னு ப்ரூவ் ஆயிடுச்சு தெரியுமா? என்று எதையோ தின்ற பாணியில் முகத்தை வைத்துக் கொண்டு பதில் சொல்பவர்களைப் பார்த்திருப்போம். ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை மறுக்க முடியாமல் சிலர் ஆரியர்கள் வேறு; பார்ப்பனர்கள் வேறு. இவர்கள் அந்தணர்கள். இங்கேயே வாழ்ந்தவர்கள் என்று மழுப்புபவர்களும் உண்டு. டி.என்.ஏ-விலேயே மாற்றம் இல்லை தெரியுமா? என்று அறிவியலைக் காட்ட முற்படுவோரும் உண்டு. இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும் பணி நமக்கு வேண்டாம்... பரிசுத்த ஆரியர்கள் அதைச் செய்வார்கள். அவர்களிடம் செல்வோம் வாருங்கள்! காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதி! இயற்கை எழில் சூழந்த இப்பகுதியில் வாழும் பல்வேறு பழங்குடி இன மக்களில் டார்ட்களும், அவர்களில் சிறு குழுவினரான ப்ரோக்பாக்களும் யார் என்பதை அவர்கள் வாயிலாகவே தெளிவுபடுத்திக் கொள்ளலாம். ஆறு அடிக்குக் குறையாத உயரமும், சிவந்த மேனியும், கூர்மையான முக அமைப்புகளும், நீல நிறக் கண்களும் கொண்டவர்களாக இருக்கிறார்கள் இவர்கள். நாங்கள் உண்மையான ஆரியர்கள். எங்களின் பூர்வீகம் கில்கித். எங்களின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் சிதையாமல் அழியாமல் காத்துவருகிறோம். எங்கள் மூதாதையர்கள் எங்களுக்கு அந்த உணர்வை ஊட்டியிருக்கிறார்கள். என்கிறார்கள் இம்மக்கள். நாங்கள் அலக்சாண்டரின் படை வீரர்கள் என்று என் தாத்தா சொல்வார். அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்துவிட்டுத் திரும்பும்போது, போரில் தோற்றுவிட, சிலர் இமாலயப் பகுதியிலேயே தங்கிவிட்டார்கள். அவர்களின் வாரிசுகள் தான் நாங்கள். நான் அலெக்சாண்டர் படம் பார்த்தேன். அதில் அவர்கள் அணிந்திருக்கும் போர் உடை எங்களின் பாரம்பரிய உடையை அப்படியே ஒத்திருப்பதைக் கண்டேன். என்கிறார் அவ்வினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். ப்ரோக்பா மக்களிடையே மனைவிகளை மாற்றிக் கொள்ளும் பழக்கம் உண்டு என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி (2006 மார்ச் 13) ஒன்று தெரிவிக்கிறது. பலதார மணம் இரு பாலருக்கும் முற்காலத்தில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், கடந்த நூற்றாண்டில் பெண்கள் பலரைத் திருமணம் செய்யும் பழக்கம் நிறுத்தப்பட்டு, ஆண்களுக்கு மட்டும் இப்போது பலதார மணம் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார் சார்ட் இனத்தைச் சேர்ந்த படித்த இளைஞரான டாஷி என்பவர். முன்பு யார் இருந்தாலும், அவர்களின் முன்னிலையில் மாறிமாறி முத்தம் பரிமாறிக் கொண்டிருந்ததாகவும், வரிசையில் நின்று முத்தமிட்டுச் செல்லும் பழக்கம் 1970களுக்குப் பிறகு மாற்றப்பட்டு, வெளியாட்கள் இல்லாமல் தான் இப்போது அது நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இப்பகுதியில் உள்ள ஆரிய இன மக்கள் பற்றி தன்னுடைய ஆவணப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சஞ்ஜீவ் சிவன் (பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரர்). தூய ஆரியர்கள் எனப்படும் இம்மக்கள் பற்றிய ஆய்வுகளைத் தொடர்ந்து பலரும் மேற்கொண்டு வருகின்றனர். பல நாடுகளில் இருந்தும் வரும் மாணவர்கள் இவர்களின் பூர்வீகம், பண்பாடு போன்றவற்றை ஆய்வு செய்துவருகிறார்கள். அவ்வாறு வருவோரில் ஜெர்மனில் இருந்து வருவோரின் எண்ணிக்கை கணிசமானது. அதிலும் ஜெர்மானியப் பெண்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்கது. அவர்களின் நோக்கம் வெறும் ஆய்வு மட்டுமல்ல என்கிறது சஞ்சீவ் சிவனின்ஆத்துங் பேபி: தி ஆர்யன் சாகா என்ற ஆவணப்படம். 2010 கோவா திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. வெகு எளிதில் யாரும் சென்று பழகி, பதிவு செய்துவிடமுடியாத செய்திகளைத் தருகிறது இவரது ஆவணப்படம். அப்பகுதியில் உலவும் ஜெர்மானியப் பெண்களைத் தொடர்ந்து சென்றும், அவர்களின் நடவடிக்கைகளைப் படம்பிடித்தும், பின்னர் அவர்களிடம் பேசி பேட்டி வாங்கியும் பதிவு செய்துள்ளார் தனது ஆவணப்படத்தில்! ஆரிய இனத்தூய்மை பற்றியும், மேன்மை பற்றியும் பேசி, அதற்காக பல்லாயிரம் மக்களைக் கொன்றுகுவித்த ஹிட்லரின் சிந்தனைகளும், இனப்பற்றும் இன்னும் அழிந்துவிடவில்லை என்பதையே அவை உறுதி செய்கின்றன. ஆய்வுக்காக என்று வரும் பெரும்பாலான ஜெர்மன் பெண்களின் முக்கிய நோக்கம், தூய ஆரிய இனத்தை மீண்டும் தங்கள் நாட்டில் உருவாக்குவது. அதற்காக அவர்கள் மேற்கொண்டிருக்கும் பணி, தூய ஆரிய இனம் என்று கருதப்படும் லடாக் பகுதியில் வாழும் டார்ட் இனத்து ஆண்களுடன் பழகி, தூய ஆரிய வித்துகளைப் பெற்று, அவர்களின் மூலம் கரு உருவாக்கிக் கொண்டு செல்லுவது! இதை அந்தப் பெண்கள் பெருமையுடன் ஒப்புக் கொள்ளவும் செய்கிறார்கள். நான் இந்தப் பணியை மேன்மையானதாக நினைக்கிறேன். இதைச் செய்வதிலும் சொல்வதிலும் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. என் பிள்ளைக்கு நான் அவனின் தந்தை பற்றிச் சொல்வேன். அவன் மிகச் சிறந்த ஆரிய இனத்தவனாக, அறிவாளியாக வளர்வான். என்கிறார் இவ்வாறு ஆரியக் கருவைச் சுமக்க வந்திருக்கும் ஜெர்மானியப் பெண் ஒருவர். இவர்களுக்கு வித்து தானம் தந்து ஆரிய இனத்தைப் பெருக்கும் முயற்சியில் உறுதுணையாயிருக்கும் ப்ரோக்பா இனத்து ஆண்களும் அதை பெருமையோடு ஒப்புக்கொள்கிறார்கள். ஒரு ஜெர்மன் பெண் என்னிடம் வந்தாள். நான் அவர்களோடு தங்கினேன். மகிழ்ச்சியாக இருந்தோம். அவர்களோடு உறவு கொண்டேன். எனக்கு ஒன்றும் செலவு இல்லை. அனைத்தையும் அவ்ர்களே பார்த்துக் கொண்டார்கள். அதற்கு அவர்கள் பணமும், பரிசுகளும் தருவார்கள். சாக்லெட் தருவார்கள். அதை என் பிள்ளைகளுக்கு நான் கொடுப்பேன். என் குடும்பத்துக்கு இது தெரியாது. அவர்கள் ஜெர்மனியில் இருந்து வருகிறார்கள். நாங்கள் ஆரியர்கள். தூய ஆரிய இனத்தின் வித்துகளை அவர்கள் அங்கே எடுத்துச் செல்ல விரும்புகிறார்கள். என் குழந்தைகள் வருங்காலத்தில் ஜெர்மனியில் இருப்பார்கள். அவர்கள் வளர்ந்ததும் தந்தையாகிய என்னை வந்து சந்தித்து அவர்கள் நாட்டுக்கு அழைத்துச் செல்வார்கள் என்று கூறுகிறார் ஒருவர். 5, 6 ஆண்டுகளுக்கு முன் இரண்டு ஜெர்மானியப் பெண்கள் வந்தார்கள். அவ்ர்கள் ஆரிய இன வித்துகளைப் பெற விரும்பினார்கள். என்கிறார் மற்றொரு இளைஞர். இது ஒருவர், இருவரோடு முடியும் விசயமில்லை. இவ்வாறு ஆரிய விதைகளைப் பெற்றுக் கொண்டு செல்ல ஜெர்மானியப் பெண்கள் வருவது இப்போது மட்டும் நடைபெறுவதில்லை. பல்லாண்டுகளாக இது நடைபெற்றுவருவதாகக் கூறுகிறார் நியூ ஜெர்ஸி பல்கலைக் கழகத்தின் மானுடவியல் ஆய்வாளர் மோனா பான். நான் யார் என்பது அவசியமில்லாதது. இது நான் தொடங்கியதில்லை... என்னோடு முடியப்போவதுமில்லை. என்று ஆவணப்படத்தில் ஒளிமறைவில் பேட்டியளித்திருக்கும் ஜெர்மானியப் பெண் சொல்வது கூர்ந்து கவனிக்கத்தக்கது. 1979-ஆம் ஆண்டுவாக்கில் இரண்டு ஜெர்மானியப் பெண்கள் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உலவுவதைப் பார்த்துப் பிடித்த ராணுவம் அவர்களை விசாரித்தபோது இவ்வுண்மை தெரியவந்ததாகச் சொல்கிறார் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்குப் பேட்டியளித்த டாஷி. இது குறித்து மேலும் நாம் தகவல்களைத் தேடியபோது, எவரெஸ்ட் ஏறிச் சாதனை படைத்தவர்களில் ஒருவரான ஹெச்.பி.எஸ். அலுவாலியா எழுதி, 1980-ல் வெளிவந்த தனித்து வாழும் அரசாட்சி: லடாக் (Hermit Kingdom: Ladakh) நூல் இது குறித்த தகவல்களை வெளிப்படுத்துகிறது. இது பற்றிக் குறிப்பிடும் அலுவாலியா, ஜெர்மானியப் பெண்கள் தூய ஆரியர்களைத் தேடிவந்து கருவுற்றுச் செல்வது தொடர்ந்து நடக்கிறது. இது ஆரிய இனப் பெண்களுக்குத் தெரிகிறதோ, இல்லையோ, அவ்வினத்து ஆண்கள் இவ்வெள்ளைக்காரப் பெண்களுடன் உறவு கொள்வதை மகிழ்ச்சியாகவே நினைக்கிறார்கள். என்கிறார். ஜெர்மனியில் மீண்டும் துளிர்த்துவரும் ஆரிய இன மேன்மைக் கோட்பாட்டின் வெளிப்பாடாக இதை நாம் கருதலாம். ஹிட்லர் சொன்ன ஆரிய இனமும், லடாக்கில் வசிக்கும் ஆரிய இனமும் ஒன்று தானா? ஹிட்லரின் ஆரிய இனக்கோட்பாடு வெள்ளைக் காரர்கள் உருவாக்கிய போங்கு என்றெல்லாம் சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். உண்மை ஆரியர்கள் இவர்களே என்றும் அவர்கள் சொல்கிறார்கள். சரி, இந்த உண்மை ஆரியர்கள் வேறு; நம்மூர் பார்ப்பனர்கள் வேறா என்னும் கேள்வி ஒன்று தொக்கி நிற்கிறதல்லவா? அதற்கும் விடை கிடைக்கிறது வேறு சிலரின் ஆய்வில். புத்த மதத்தைத் தழுவியிருக்கும் இவர்களின் பழக்க வழக்கங்கள், பண்பாட்டுக் கூறுகள் இந்து பார்ப்பனர்களுடையதாகவே இருக்கிறது. கோமாதா வழிபாடும், இவர்களின் தெய்வங்களும் பார்ப்பனப் பண்பாட்டை ஒத்துள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள். மஹாபாரதம் மற்றும் இந்து ஓவியங்களில் இவர்கள் குறிப்பிடப்பட்டிருக் கிறார்கள் என்றும் சொல்கிறது அத்தகவல். ஆடு, மாட்டு ஓட்டி வந்த ஆரியக் கூட்டம் இங்கிருந்த பெண்களுடன் கலந்து தான் இந்தோ-ஆரிய இனம் உருவானது. அதனால் தான் பஞ்சமர்களுக்கும் கீழாக பெண்களைக் கருதுகின்றன இந்து மதத் தத்துவங்கள். அதே போல, கிரேக்கர்களின் டி.என்.ஏ-வை ஒத்த டி.என்.ஏ-க்கள் வடஇந்தியாவில் உள்ள ஆரியர்களிடம் இருப்பதாகக் கூறும் ஆய்வும் ஆரியப் படையெடுப்பை நிறுவும் ஆதாரங்களாக வருங்காலத்தில் இருக்கும். ஆரிய இனத்தின் மேன்மை என்னும் கருத்தாக்கத்தில் ஸ்வஸ்திக் சின்னம் கொண்ட நாஜிக் கும்பலும், காவிக் கும்பலும் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள் என்பதில் இனியும் அய்யமிருக்க முடியாது.

Tuesday, December 21, 2010

பதில் உண்டா?

பொதுவாக கல்கி கிருஷ்ணமூர்த்தி அய்யரை சீர்திருத்தவாதி என்றுதான் அவர்கள் வட்டாரத்தில் சொல்லுவார்கள்.

இந்த வார கல்கி இதழ் (26.12.2010) கல்வெட்டுகள் என்ற பகுதியில் உண்மை யான ஆஸ்திகம்! என்ற தலைப்பில் கல்கியின் கருத் துகள் என்று கூறி ஒரு பக்கக் கட்டுரையை வெளியிட்டுள் ளது.

மேனாடுகளில் ஒரு காலத்தில் கடவுள் இல்லை என்று சொன்னவர்களையும், வேறு விதத்தில் தேவ தூஷணை செய்தவர்களையும் நெருப்பிட்டுக் கொளுத்தி னார்கள்; வேறுவித சித்திர வதைகளும் செய்தார்கள்.

ஆனால், இந்தியாவில் அம்மாதிரி என்றைக்கும் கிடையாது என்று கல்கி கிருஷ்ணமூர்த்தி சொன்ன தாக இவ்வார கல்கி வார இதழ் கூறுகிறது.

வரலாற்றை மய்யப் படுத்தி நாவல்கள் எழுது வதில், பிரசித்தி பெற்ற கல்கி கிருஷ்ணமூர்த்தி - இப்படி உண்மைக்கு முரணாக எழுதுகிறார் என்றால், இனி எந்தப் பார்ப்பானின் வார்த் தைகளை வாய்மையானது என்று கருதுவது?

எண்ணாயிரம் சமணர் களைக் கழுவில் ஏற்றிக் கொன்றது எந்த மதம்? இந்து மதத்தின் உயிர்க் கொலை களையும், வருணாசிரமப் போக்குகளையும், கடவுள் களையும் மறுத்துக் கருத்துப் பிரச்சாரம் செய்தார்கள் என்பதற்காகத்தானே இந்தக் கொடுமை?

மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த்

திண்ணகத் திருவால வாயருள்

பெண்ணகத் தெழில் சாக்கிய பேய்மண்

பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே

என்றவர்- தேவாரம் பாடிய திருஞான சம்பந்தன் அல்லவா!

மதுரையில் குடிகொண் டிருக்கும் எங்கள் சிவனே, பவுத்தர், சமணர் வீட்டு அழகிய பெண்களின் கற்பை அழிக்க எங்களுக்கு அருள் புரிவாயாக என்று வேண்டிக் கொண்டானே- இதற்கு என்ன பதில்?

வேத வேள்வியை

நிந்தனை செய்துழல்

ஆதமில்லி யமணோடு தேரரை

வாதில் வென்றழிக்க

திருவள்ளமே!

பவுத்தர்களையும், சமணர்களையும் வாதத்தில் வெல்ல கடவுள் அருள்புரிய வேண்டுமாம்.

அப்படியென்றால் திரு ஞான சம்பந்தன்களுக்குச் சக்தியில்லை; சரக்கும் இல்லை. கடவுள்தான் அருள் புரிய வேண்டும் என்றால், பக்தனின் யோக்கியதை என்ன? கடவுளின் யோக்கி யதையும் தான் என்ன?

சமணர்களையும், பவுத் தர்களையும் கண்ட மாத் திரத்திலேயே அவர்களின் தலைகளை அறுக்கவேண் டும் என்று அரங்கமா நக ருள்ளானை வேண்டிப் பாடியுள்ளாரே தொண்டரடிப் பொடியாழ்வார்.

(நாலாயிரத் திவ்விய பிரபந்தம்- பாடல் எண் 879)

அரசர்களைக் கையில் போட்டுக்கொண்டு பார்ப்ப னர்கள், சமணர்களைக் கழுவில் ஏற்றிக் கொல்லு கின்ற கல்வெட்டுகளை திருவத்திபுரம் கோயிலுக்குள் இன்றும் பார்க்கலாமே!

கடவுளோடு அன்றாடம் குடும்பம் நடத்துவது போலக் கசிந்துருகும் கல்கிகள் இவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல முன்வருமா?

Monday, December 20, 2010

மாறு அல்லது மாண்டு போ!



மாறு அல்லது மாண்டுபோ!

(தந்தை பெரியாரின் இறுதிப்பேருரையாம் மரண சாசனத்திலிருந்து)



இன்றைய தினம் சமுதாய இழிவு ஒழிப்பு சம்பந்தமாக, சென்னையில் நடைபெற்ற மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கவே இந்தப் பொதுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்கள். நான் இந்தத் தியாகராயர் நகருக்குக வந்து சுமார் 10 ஆண்டு களுக்கு மேலாகிறது. இதன் காரணமாக எனது புதிய கருத்துகள் இந்தப் பகுதி மக்களுக்குத் தெரிய வாய்ப்பில்லாமலும் போயிருக்கலாம். நான் பேச்சுத் துவக்குவதற்கு முன்பாக நண்பர் வீரமணி அவர்கள் கடவுள் மறுப்பு வாசகத்தைக் கூறினார்கள். கடவுள் இல்லை - கடவுள் இல்லவே இல்லை! கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் -கடவுளை பரப்பியவன் அயோக்கியன் - கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி ! இதன் தன்மைகளைப்பிறகு விளக்கு கிறேன்.

பழக்கத்தில் நம்மை ஈன ஜாதி, கோயிலுக்குள் வர வேண்டாம்; கல்லைத் தொட்டால் சாமி தீட்டாகிவிடும் என்கிறான்; சூத்திரனுக்குத் திருமணம் கிடையாது என்கிறான்; சுயராஜ்யம் என்கிறான்; அந்த சுயராஜ்யத் திலும் நாம் சூத்திர்கள், தேவடியாள் மக்கள் என்கிறான்.

இந்து என்றால் என்ன?

எதன்படி என்றால் சாஸ்திரப்படி, மதப்படி மட்டுமல்லாமல், இன்றைய அரசியல் சட்டப்படியும்கூட. இந்தச் சாஸ்திரம் என்றைக்கு எழுதினான்? இதுபோல் அயோக்கியத்தனம் உலகில் உண்டா? என்றைக்கோ, எவனோ பேர் தெரியாத அனாமதேயம், அவன் சொல்லுவான் வசிஷ்டன், நாரதன், எக்கியவல்கியன், அவன் இவன் எழுதினான் என்றெல்லாம் சொல்லு வான். இவன்களுக்கு வயது என்ன? நாரதன் 5 கோடி வருஷத்துக்கு மேல் இருந்திருக்கிறான். ஒரு கர்ப்பம் என்றால் 5 கோடி, 10 கோடி வருடம் என்பார்கள். 2,3 கர்ப்பம் முன்பு இருந்திருக்கிறான் நாரதன். அப்படி ஒருத்தன் இருந்தானா? இருக்கமுடியுமா? அதை வைத்துத் தீர்ப்பு சொல்லுகிறானே கோர்ட்டிலே; இதனுடைய அர்த்தம் என்ன? ஆளுகிறவர்கள் அயோக்கியர்கள், ஆளப்படுகிறவர்கள் இத்தனை மானங்கெட்ட பக்தர்கள். இதைத் தவிர வேறு என்ன சொல்லமுடியும்?

வீரமணி இப்போது சொன்னாரே, இந்து லா என்கிறானே; யார் இந்து? இந்து என்றால் என்ன அர்த்தம்? என்றைக்கு முதற்கொண்டு இந்து வந்தான்? எவ்வளவு இலக்கியம் இருக்கிறது. ராமாயணம், பாரதம், விஷ்ணு புராணம், கந்த புராணம் என்று பார்ப்பானுக்கு எவ்வளவோ இலக்கியங்கள் இருக்கின்றன. நம்ம புலவர்களுக்கும் ஏராளமாக இருக்கிறது; பஞ்சகாவியம், அய்ந்து இலக்கணம், அது இது என்று ஏராளமாக இருக்கிறது. எதிலாவது இந்து என்ற வார்த்தை இருக்கிறதா? எந்தப் புத்தகத்திலாவது இருக்கிறதா? இந்து என்பவன் எப்படி வந்தான் என்பது அவர்கள் சொல்லுவதிலே அசிங்கமாக இருக்குதே. சிந்துநதி காரணமாகச் சிந்துவாகி பிறகு இந்து என்ற அழைக் கப்பட்டான் என்கிறான். சிந்து நதிக்கும் நமக்கு என்ன சம்பந்தம்? ஆரியன் வந்தபோதுதானே சிந்துநதி இங்கே வந்தது?

சிந்திக்க நாதி இல்லை!

இந்து என்றால், இரண்டு ஜாதி. அதிலே ஒன்று பார்ப்பான்; மற்றவன் சூத்திரன் . பார்ப்பான் என்றால் மேல் ஜாதி; சூத்திரன் என்றால் கீழ் ஜாதி. சூத்திரன் மனைவி என்றால், பார்ப்பானுக்கு வைப்பாட்டி. இது சட்டத்திலே, சாத்திரத்திலே இருக்கிறது என்று சொன்னால், பிறகு நாம் விடியறது தான் எப்போது? ஒரு மனிதனிடம், ஏண்டா உன் பொண்டாட்டி இப்படி.... என்று சொன்னால், கத்தியை எடுத்துக்கிறான். இத்தனை பேரையும் தேவடியாள் மகன் என்று சொன்னால் ஒருவனுக்கும் மானம் இல்லை என்றால், என்ன அர்த்தம்?

நமக்கு மானமிருந்தால், இந்த நாட்டில் பார்ப்பாரக் குஞ்சு இருக்குமா? எவனாவது பூணூல் போட்டுக் கொண்டு நம்முன் வருவானா? பூணூல் போட்டிருந்தால் என்ன அர்த்தம்? போடு செருப்பாலே, அப்படி என்று கிளம்ப மாட்டானா? உன்னை இன்னொருத்தன் பெண்டாட்டி என்ற சொன்னால், எவ்வளவு ஆத்திரம் வரும்? அதைவிட மேலாக அல்லவா சூத்திரன் என்றால் ஆத்திரம் வரும்? இதைப்பற்றிச் சிந்திக்கவே ஆள் இல்லையே; நாதி இல்லையே!

உலகம் எவ்வளவு முன்னேறுகிறது?

பெரிய சமுதாயம், எவ்வளவு முன்னுக்கு வர வேண்டியவர்கள்? நாதியற்ற காட்டுமிராண்டியாக அல்லவா வாழுகிறோம்? வெள்ளைக்காரளைப் பாரய்யா; எவ்வளவு முன்னுக்கு வந்துவிட்டான்! மிகவும் காட்டு மிராண்டியாக இருந்தவர்கள் வெள்ளைக்காரர்கள். இன்றைய தினம் , ஆகாயத்திற்கு, சந்திரனுக்கு அல்லவா பறக்கிறார்கள்?

அமெரிக்காவைப் பார்!

அமெரிக்காவில் ஆண் இந்திரியம் கொண்டுவந்து சீனாவிலே போய் பெண் இந்திரியம் கொண்டுவந்து இரண்டையும் சேர்த்துப் பிள்ளை உண்டாக்குகிறானே. இப்ப நேற்று, முந்தாநாள் வந்த விஷயத்திலே இரண்டு பேர் இந்திரியத்தையும் டப்பியில் வாங்கி வைத்து 10 வருடம் கழித்துப் பிள்ளையை உண்டாக்கலாம். இங்கிருந்து அமெரிக்காவுக்கு டெலிபோனில் பேசுகிறோம். நம்ம முட்டாள் பசங்களுக்கு 100, 200 கடவுள்! ஒரு காரியமும் செய்யமுடியவில்லை இவன்களாலே! இதற்கு எவ்வளவு செலவு? கல்யாணம், கருமாதி, உற்சவம் என்று எவ்வளவு செலவு? வேளைக்கு வேளை சோறு, உற்சவம்! அரசாங்கம் வரி போடுகிறது என்று சொல்லுகிறானே தவிர, இதை எவன் எதிர்க்கிறான்?

கோயிலுக்குப் போகிறான், குளிக்கிறான், முழுகு கிறான். கடவுள் சாமிகிட்ட போன உடனே டக் என்ற வெளியே நிற்கிறானே! ஏண்டா வெளியிலே நிற்கிறே என்றால், சூத்திரன் உள்ளே போகலாமா என்கிறான். எப்போ? 1973 -இல்! நமக்கு ஒரு நாடாம்; நாம் ஒரு சமுதாய மாம். இதற்கு யார் பாடுபடுகிறார்கள்? நாம் மூணே முக்கால் பேரைத் தவிர யார் இதைப் பேசுகிறார்கள்?

இந்தியக் கம்யூனிஸ்ட்கள்!

ரஷ்யாவிலே கம்யூனிஸ்ட் இருக்கிறான் என்றால் கோயில்களை எல்லாம் இடித்தான்; பாதிரிகளை எல்லாம் வெட்டினான். இங்கே இருக்கும் கம்யூனிஸ்ட் என்ன செய்கிறான்? பொறுக்கித் தின்கிறான்! மனிதனைப் பற்றி எவனும் பேசவில்லையே. இவ்வளவு மாநாடு நடத்தினோம்! எவனய்யா எங்களை ஆதரித்தான்? பயப்படுகிறானே, ஓட்டுப் போய்விடும் என்று!

இருப்பது கஷ்டமல்ல; சாவதே கஷ்டம்!

ஆகவே, தோழர்களே! முதலில் நமக்கு இருக்கிற இழிவு நீங்க வேண்டும். மனிதனுக்கு இருக்கிற ஜாதி உரிமை என்ன தெரியுமா? ஒவ்வொரு மனிதனும் குறைந்தது 500 வருடம் இருக்கலாம். இப்போது சராசரி 52 வயதுதான். வெள்ளைக்காரன் வந்ததனாலே இந்த அளவாவது இருக்கிறோம். அவன் வருவதற்கு முன்பு இங்கு சராசரி வயது 10கூட இல்லை; 7 வயதுதான். அவன் வந்த பிறகு வைத்தியம் சுகாதாரம் எல்லாம்.

எல்லாம் நமக்கு அவன் ஏற்றிய பிறகுதானே இவ்வளவு உயர்ந்தது. ரஷ்யாவிலே கிட்டத்தட்ட 100 வயது சராசரியாக வாழுகிறான். நாமும் இன்னும் 10 வருஷத்தில் 75 வயதுவரை வாழ்வோம். இப்படி நாளாக, நாளாக 500 வயதுவரை வாழ வேண்டி வரும்! இருப்பது கஷ்டமல்ல; சாவதுதான் கஷ்டம்! அவ்வளவு அற்புத அதிசயங்களை எல்லாம் கண்டுபிடித்திருக்கிறான்.

சுயமரியாதை இயக்கம் இல்லாவிட்டால்

நாம் வளர்ச்சி அடையாததற்குக் காரணம், நாம் தேவடியாள் மகனாக இருப்பதால்தான். நமக்கு, நமது சுயமரியாதை இயக்கம் வராவிட்டால் படிப்பேது? சொல்லுங்கள்! சுயமரியாதை இயக்கம் வராவிட்டால், 100-க்கு 10 கூட படித்திருக்கமாட்டார்களே! சுயமரியாதை இயக்கம் வந்ததற்குப் பிறகுதானே இவ்வளவு! சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை என்ன தெரியுமா? கடவுள் ஒழியவேண்டும்; காந்தி ஒழியவேண்டும்; பார்ப்பான் ஒழிய வேண்டும். அன்று முதல் இன்று வரை அதே கொள்கைதான்.

காந்தியாரை பார்ப்பான் விட்டுவைத்தானா?

காந்தி நம்ம கொள்கைப் பக்கம் திரும்பினார். காங்கிரசுக்கும், கடவுளுக்கும் ஒன்றும் சம்பந்தம் இல்லை என்று சொன்னார். உடனே காந்தியைக் கொன்று போட்டான், சொன்ன 30 நாளிலே! இவரும் ராமசாமி ஆகிவிட்டார்; இவன் இந்தியாவிலே பெரியஆள்; இவனை விட்டுவைக்கக் கூடாது என்று உடனே கொன்று போட்டான்.

செருப்பால் அடித்தோமே கடவுளை!

கடவுள் கதையும் சிரிப்பாய்ச் சிரிக்குது. அதுதான் வீரமணி சொன்னாரே; செருப்பால் அடித்தார்களே கடவுளை! என்ன ஆகியது? செருப்பாலே அடித்தால் ஓட்டுப் போடமாட்டான் என்று காமராஜர் முதற்கொண்டு பிரசாரம் செய்தார். தி.மு.க. 183 வந்துவிட்டதே! காங்கிரசு, காமராசர், கடவுள், வெங்காயம் எல்லாம் சேர்ந்து 20பேர்கூட வரவில்லையே. சாமியைத் திட்டுகிறோம் என்று குறை சொல்லுகிறார்களே தவிர, சாமியை செருப்பாலடித்தவர்கள் 200 பேர் வந்து விட்டார்களே!

நாம் பள்ளத்தில் கிடக்கிறோம்!

ஆனதனால் மக்கள் அறிவு பெற்று வருகிறார்கள்; நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். விஷயங்களை எடுத்துச் சொல்லவேண்டும். தெரியாது அனேகம் பேருக்கு. இப்போது நாம் முன்னேற்றம் அடைய வேண்டும். மேலே வரவேண்டும். அப்புறம் இன்னும் மேலே போகலாம். இப்போது நாம் பள்ளத்தில் கிடக்கிறோம். 4ஆவது ஜாதி, 5ஆவது ஜாதி, தீண்டப்படாத ஜாதி, பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள் என்றல்லவா நாம் இருக்கிறோம்? இது அல்லவா மாற வேண்டும்? இது மாறாமல் மேலே போக முடியுமா? இதை மாற்றிவிட்டு அல்லவா மேலே போகவேண்டும்? நாங்கள் தொடர்ந்து ஏதாவது செய்துகொண்டு வருகிறோம்; எங்களால்தான் முடிய வேண்டும என்று இருக்கிறது நிலைமை! வேறு எந்தக் கட்சிக்காரருக்கும் கவலை இல்லை! எலக்ஷனிலே ஓட்டுப் போய்விடும் என்று பயப்படுகிறார்கள். ஆகவே நாம் மாநாடு போட்டோம்,. அதற்குக் காரணம் கூட வீரமணி சொன்னாரே!

சட்டத்தில் தந்திரம்!

தீண்டாமை இல்லை என்று சட்டம் செய்துபோட்டான். எல்லாவற்றிலும் தீண்டாமை ஒழிந்துவிட்டது என்ற சொல்லிவிட்டு மதத்திற்கு மட்டும் தீண்டாமை என்று நிபந்தனை போட்டுவிட்டான். நாம் கர்ப்பகிரகத்திற்குள் போகக்கூடாது என்று சட்டம் செய்தான். எனவேதான். மாற்றவேண்டும் என்கிற நிலைமைக்கு வந்துவிட்டோம். சட்டத்திலும், சாஸ்திரத்திலும் இருப்பதாலே முதலில் அதை மாற்ற வேண்டும் என்ற முடிவு செய்துவிட்டோம்.

ஆட்சியை ஒழித்தாக வேண்டும்!

சட்டத்திலே இருப்பது ஒழியவேண்டுமானால், சட்டத்தை ஒழித்தால்தான் உண்டு; சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்றால் ஆட்சியை ஒழித்தால்தான் உண்டு! அந்த அளவுக்கு நாம் பக்குவமாக வேண்டும். ஆனால், அவன் ஆட்சி ஒழியும்படி இல்லாமல் பாதுகாத்துக் கொண்டான். நாடு கூட்டாக இருந்தால் எல்லாம் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்று நாட்டை 14,15 நாடாகப் பிரித்தான். அந்தந்த நாடு மற்ற நாட்டோடு சம்பந்தம் இல்லை என்றான். 16 மாநிலத்திலே மக்கள் இருக்கிறார்கள்.அவனுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லையே! மலையாளம் , தெலுங்கு, இந்தி வங்காளி என்று தனித்தனி மாநிலங்கள்.

அரிய முயற்சி தேவை!

தமிழ்நாட்டில் உள்ள நாலரைக் கோடி மக்களில் துலுக்கன், கிறிஸ்தவனைத் தவிர, மூன்று கோடி மக்கள் சூத்திரன்தானே? முஸ்லிம், கிறிஸ்துவன் எல்லாம் சேர்த்தால் 10 லட்சம் இருக்கும். ஆகவே, இதை மாற்றியாக வேண்டும்; பெரிய விஷயந்தான். பெரிய முயற்சி செய்ய வேண்டும்! பெரிய முயற்சி செய்ய வேண்டும்!!

மனிதன் இருக்க வேண்டும்!

ஒரு அரசாங்கம் நடக்க வேண்டுமானால் அரசியல் சட்டம் வேண்டும்; ஒத்துக்கொள்கிறேன். அதற்காக அரசாங்கம் நடக்க வேண்டும் என்பதற்காகப் பார்ப்பான் இருக்க வேண்டுமா? அரசாங்கம் இருக்க வேண்டும் என்பதற்காகச் சூத்திரன் இருக்க வேண்டுமா? மனிதன் தானே இருக்க வேண்டும்? மற்ற நாட்டிலேயும்தான் அரசாங்கம் நடக்கிறது. அங்கு பார்ப்பான், சூத்திரன் இருக்கிறானா? ஆகவேதான், அவன் வைத்திருக்கிற பாதுகாப்பு எல்லாம் எல்லோரும் ஒன்று சேரக்கூடாது என்பது, பார்ப்பானுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பதாற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடு. நாம்தான் மாற்ற வேண்டும் என்கிறோம்.

மாறு அல்லது மாண்டு போ!

நாம் நடத்திய மாநாட்டுக்கு வேறு கட்சிக்காரர்கள் ஒருவரும் வரவில்லையே; ஓர் உதவியும் செய்ய வில்லையே; சி. அய். டி. யும் வேறு கட்சிக்காரன் வருகிறானா என்று கவனித்து வந்தான். எனவே பயந்து கொண்டு ஒருவரும் வரவில்லை. இழிவுக்கு ஆளான வன் எல்லாம் வரவேண்டுமே! வந்து உதவி செய்ய வேண்டுமே! மந்திரிகள் வரவேண்டுமே! ஆகவே விஷயம் முக்கியமானது, மாறியே ஆகவேண்டும்; மாறாவிட்டால் சாகவேண்டும்!

Sunday, September 19, 2010

மண்டல் பரிந்துரை 17 ஆண்டுகள் ஆகியும் ஏழு விழுக்காடுகூட நிரம்பவில்லையே!



மண்டல் பரிந்துரை 17 ஆண்டுகள் ஆகியும்
ஏழு விழுக்காடுகூட நிரம்பவில்லையே!

சென்னை, ஆக. 31 மத்திய அரசில் 27 விழுக் காடு பணியிடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கவேண்டும் என்ற மண்டல் பரிந்துரை நடப்பிற்கு வந்து 17 ஆண்டுகள் ஆகும் நிலை யில், அவர்கள் 7 விழுக் காடு இடங்களையே பெற்றுள்ளார்கள்.



மத்திய அரசுப் பணிப் பிரிவுகள் ஏ, பி, சி, டி எனப் பகுக்கப்பட்டுள் ளன. இந்தப் பணிகளில் சராசரியாக 6.87 விழுக் காடு இடங்கள் மட்டும் தான் இதர பிற்படுத்தப் பட்டவர்களைக் (ஓ.பி.சி.) கொண்டு நிரப்பப்பட்டுள்ளன.

சென்னையைச் சேர்ந்த உயிர் மருத்து வப் பொறியாளரான ஈ. முரளிதரன், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், மத்திய அரசிடம் இருந்து தகவல் கேட் டிருந்தார். 2009 ஆம் ஆண்டுவரைக்குமான புள்ளி விவரங்கள் கேட் டிருந்தார். ஆனால், 2008 ஜனவரி முதல் தேதிவரைக்குமான விவ ரங்கள்தான் சேகரிக்கப் பட்டிருப்பதாகக் கூறி அவற்றை மத்திய அரசு அனுப்பி வைத்தது.



மத்திய அரசில் பிற் படுத்தப்பட்டோர் பணி நியமனம்: (அட்ட வணை தனியே காண்க)

நேர்முகத் தேர்வின் மூலம் சிவில் பணி களுக்கு இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர் களுக்கு 1993 செப்டம் பர் 8 முதல் நடப்பிற்கு வந்தது.

ஆறு அமைச்சகங் கள் / துறைகளைப் பற்றிய விவரங்களைத் தரவில்லை என மத்திய அரசின் பணியாளர் துறை அமைச்சு தெரி வித்துள்ளது. ஆனால், அந்த ஆறு துறைகள் எவை எனக் குறிப்பிட வில்லை.

22 விழுக்காடு ஷெட்யூல்டு வகுப்புக்கு மத்திய அரசில் ஒதுக் கீடு. அதில் 17.45 விழுக் காடு நிரப்பப்பட்டிருக் கிறது. பழங்குடிகளுக்கு 7.5 விழுக்காடு ஒதுக்கீடு உண்டு. அதில் 6.83 விழுக்காடு நிரப்பப்பட் டுள்ளது.

ஆனால், இதர பிற் படுத்தப்பட்டவர்களுக் கான 27 விழுக்காடு ஒதுக்கீட்டில், சுமார் 7 விழுக்காடு மட்டுமே நிரப்பப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின்மூலம் சமூகநீதி அளிப்பதில் மத்திய அரசு உரிய கவ னம் செலுத்தவில்லை.

Tuesday, October 28, 2008

கோட்சே காலம்முதல் இன்றுவரை

கோட்சே காலம்முதல் இன்றுவரை

ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் கூட்டத்தின்

திரைமறைவுச் சதிகள்-கொலைகள்

சங்பரிவார்க் கும்பல் முன்னின்று நடத்தும் வன்முறைகளை முசுலிம்கள் நடத்தியதாகப் பழிபோடும் சூழ்ச்சிகளை தக்க ஆதாரங் களுடன் அம்பலப்படுத்தியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:-

அண்மைக்காலமாக இந்தியாவில் பல பகுதிகளிலும் குண்டு வெடிப்புகள் சர்வ சாதாரணமாக நடந்துகொண்டு இருக்கின்றன. விலை மதிப்பில்லா மனித உயிர்கள் பலியாகின்றன. வேதனை! வேதனை!! வெட்கம்!!

இந்தக் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் மதவெறித்தனம் கொம்பு சீவப்பட்டு இருக்கிறது.

பெரும்பாலும் இந்தக் குண்டுவெடிப்புகளுக்கெல்லாம் முசுலிம் தீவிரவாதிகள்தான் காரணம் என்பது போன்ற ஒரு தோற்றம் கொடுக்கப்பட்டும் வருகிறது!

ஊடகங்கள் கைகளில் இருக்கும் காரணத்தால்...

ஊடகங்களில் 71 சதவிகிதம் உயர்ஜாதி பார்ப்பனர்களின் கைகளில் அடைக்கலம் தேடியுள்ளதால், முஸ்லிம் தீவிரவாதம் என்ற தலைப்பில் திட்டமிட்ட வகையில் பிரச்சாரப்படுத்தி வருகின்றனர்.

ஆனால், அண்மையில் வெளிவந்த அதிர்ச்சியூட்டும் சில தகவல்கள் - கண்டுபிடிப்புகள் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார்க் கும்பல் இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு, அந்தப் பழியை முசுலிம்கள்மீது சுமத்தும் ஒரு தந்திரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நிரூபித்து வருகின்றன!

இதன்மூலம் பெரும்பான்மை மக்களான இந்துக்களை சிறுபான்மைமக்களான முசுலிம்கள்மீது வன்முறையை ஏவிவிடுவதுதான் இதன் திரைமறைவு நோக்கமாகும்.

பார்ப்பனர்கள் - ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சேர்ந்தவர்கள் எப்போதும் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடக் கூடியவர்கள் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு.

காந்தியாரைக் கொன்ற கோட்சே!

1. உதாரணமாக தேசப்பிதா என்று மக்களால் மதிக்கப்பட்ட காந்தியாரைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பார்ப்பனன் என்ன செய்தான்? தனது கையிலே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக்கொண்டான்; முசுலிம் களின் மார்க்கப்படியான சுன்னத்தும் செய்துகொண்டிருந்தான் என்றும் கூறுகிறார்கள்!

காந்தியாரைச் சுட்டுக் கொன்றவன் ஒரு முசுலிம் என்று பழி சுமத்தி, பிரச்சாரம் செய்து, இந்துக்களை முசுலிம்கள்மீது மோதவிடும் சூழ்ச்சிதானே இது?

காந்தியாரைக் கொன்றது முசுலிம் அல்ல - ஒரு இந்துப் பார்ப் பனன் என்று தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் வெளிச் சத்துக்குக் கொண்டு வந்தனர். அந்த உண்மை வெளிவருவதற்கு முன்பாக சில ஊர்களில் இந்துக்களால் முசுலிம்கள் தாக்கவும் பட்டனர்.

சதுமுகையில்...

2. தமிழ்நாட்டில் சத்தியமங்கலத்தையடுத்த சதுமுகை என்ற ஊரில் விநாயகன் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டு இருந்தது. இன்னொரு சாமி சிலை பீடத்திலிருந்து கீழே தள்ளப்பட்டு இருந்தது.

ஊரில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினரின் புத்திசாலித்தன மான விசாரணையில் சிக்கியவர்கள் யார் என்றால், அவ்வூர் இந்து முன்ன ணியைச் சேர்ந்த மஞ்சுநாதன் (வயது 17) மற்றும் செல்வக்குமார் (வயது 23) ஆகியோர்.

தாங்கள்தான் அவ்வாறு செய்ததாக இந்து முன்னணியைச் சேர்ந்த இரு வரும் ஒப்புக்கொண்டனர். திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள்மீது பழியைப் போடுவதுதான் அவர் களின் நோக்கம் என்ற குட்டும் உடைபட்டது. (தி இந்து, 18.2.2002).

தென்காசியில்...

3. அதேபோல, திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். 2006 ஜனவரி 24 இல் இது நடந்தது.

இந்து - முசுலிம் மதக் கலவரத்தைத் தூண்டவேண்டும் என்ற பின்னணியில் இந்து முன்னணியினர் இருந்தனர்.

தென்காசி நகர இந்து முன்னணியின் தலைவர் குமார்பாண் டியன் என்பவர், முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப் பட்டார். இதில் மூன்று முசுலிம்கள் கைது செய்யப்பட்டனர். மதக் கலவரம் ஏற்பட்டு, முசுலிம்களின் கடைகளும், வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டன.

நோக்கம் மதக் கலவரத்தைத் தூண்டுவதே!

இதன் பின்னணியில் தென்காசியில் இந்து முன்னணி அலுவல கத்தில் குண்டுவெடித்தது. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப் பட்டனர். அத்தனைப் பேரும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள்.

குமார்பாண்டியன் கொலை செய்யப்பட்டபோது பெரிய அளவில் மதக்கலவரம் ஏற்படாததால், இந்தக் காரியத்தைச் செய்து அதன் மூலம் பெரிய அளவு கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்பதுதான் தங்கள் நோக்கம் என்று கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் கொடுத்தனர்.

கடையநல்லூரைச் சேர்ந்த சிவா என்ற சிவானந்தம் தமிழக இந்து முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆவார். இவர் கேரளாவில் கல்குவாரியில் வேலை செய்தவர். பாறைகளை உடைக்கப் பயன்படும் அமோனியம் நைட்ரேட்டை வெடிகுண்டு தயா ரிப்பதற்காக இவர் கொடுத்திருக்கிறார் என்பதும் கண்டுபிடிக்கப் பட்டது.

கான்பூரில் நடந்தது என்ன?

4. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 2008 பிப்ரவரி 24 இல் நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் சங் பரிவார்க் கும்பல் வெடிகுண்டு தயார் செய்யும் தொழிற்சாலையையே நடத்திவரும் சங்கதி வெளியில் வந்தது.

பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த ராஜீவ் மிஸ்ரா மற்றும் பூபீந்தர் சிங் ஆகியோர் வெடிகுண்டுகளைத் தயாரிக்கும்பொழுது எதிர்பாராதவிதமாக அவை வெடித்து உடல் சிதறிப் போனார்கள்.

மிகப்பெரிய தொடர் குண்டுவெடிப்பு வன்முறைக்கு அவர்கள் திட்டம் தீட்டியிருந்தது தெரிய வந்தது. கான்பூர் காவல்துறை அய்.ஜி. எஸ்.என். சிங் செய்தியாளர்களிடம் இதுபற்றி விளக்கினார்.

வெடிகுண்டு தயாரிப்புக்குத் தேவையான ஏராளமான பொருள் களும் கைப்பற்றப்பட்டன.

இராணுவத்தில் பயன்படுத்தப்படக் கூடிய குண்டுகளுக்கு ஒப்பானவை அவை!

வரைபடங்களும், நாள்குறிப்பு, தாக்கப்படவேண்டிய முசுலிம் களுக்குச் சொந்தமான முக்கிய இடங்கள்பற்றிய விவரங்கள் எல்லாம் கிடைத்தன.

மகாராட்டிரத்தில்...

5. மகாராட்டிரத்தில் நந்தித் எனும் இடத்தில் இதேபோல, குண்டு களைத் தயார் செய்து கொண்டிருந்தபோது, வெடித்துச் சிதறியதால் பஜ்ரங்தள் தீவிரவாதிகளான நரேஷ்ராஜ் மற்றும் ஹிமான் ஷீ பான்சே ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர் (4.5.2006).

பெண் சாமியார் சிக்கினார்

6. மகாராட்டிர மாநிலம் மலேகானில் சிமி அலுவலகம் சக்தி வாய்ந்த குண்டுகளால் தகர்க்கப்பட்டது (29.9.2008). ஆறு இசு லாமியத் தோழர்கள் பலியானார்கள்; 90 பேர் படுகாயமடைந்தனர்.

மோட்டார் சைக்கிளில் மர்ம மனிதர்கள் வெடிகுண்டுகளை எடுத்துவந்து வெடிக்கச் செய்திருப்பது புலன் விசாரணையில் தெரிய வந்தது. டைமர் கருவி பொருத்தப்பட்டு இருந்த அந்த வெடிகுண்டு ஆர்.டி.எக்ஸ் மற்றும் அமோனியம் நைட்ரேட் கலவையால் தயாரிக்கப்பட்டு இருந்தது.

புலன் விசாரணையில் பெண் சாமியார் பிரக்யாசிங் பாரதி தாக்கூர் (வயது 38) என்பவர் இதன் பின்னணியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைதும் செய்யப்பட்டுவிட்டார். வந்தே மாதரம் என்ற அமைப்பைத் தொடங்கிய இந்தப் பெண் சாமியாருக்கு உச்சநீதிமன்றத்தால் நீரோ மன்னன் என்று வருணிக்கப்பட்ட முதலமைச்சராகிய நரேந்திரமோடி, குஜராத் மாநில அரசின் உதவித் தொகையெல்லாம் கூட கிடைத்து வருகிறதாம்!

படிக்கும் காலத்தில் ஆர்.எஸ்.எஸின் மாணவர்ப் பிரிவான ஏபிவிபியில் (ஹக்ஷஏஞ) தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார். துர்காவாகினி, ஜாக்ரான் மஞ்ச் இவைகளில் தீவிர உறுப்பினராக இருந்திருக்கிறார் இந்தப் பெண் சாமியார்!

பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் ஆகியோரிடம் நெருக்கமானவர் இந்தப் பெண் சாமியார். மேடைகளில் இந்து வெறித்தன நெருப்பைக் கக்கும் பேச்சாளர் இவர். இவரோடு மேலும் மூவர் இந்த வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர். மூவரும் இராணுவத்தில் பணி யாற்றிய அதிகாரிகள். இருவர் கைது செய்யப்பட்டு விட்டனர்; இராணுவப் பணியில் இருக்கும் இன்னொருவரைக் கைது செய்ய இராணுவத் துறையிடமிருந்து அனுமதிக்காகக் காத்திருக்கின் றனர்.

குல்கர்னி, உபாத்யா ஆகிய முன்னாள் இராணுவ அதிகாரிகள் ஆவார்கள். நாசிக் அருகே இராணுவப் பயிற்சி மய்யம் ஒன்றினை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டுகளைத் தயார் செய்வது எப்படி? அவற்றைக் கையாளுவது எப்படி என்கிற பயிற்சிகளையெல்லாம் சங் பரிவார்க் கும்பலுக்கு இவர்கள் கற்றுத் தந்துள்ளனர்.

பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இராணுவத்திலும் ஏராளமான ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களை நுழைத்தனர். விமானப் படைத் தளபதி விஷ்ணு பகவத் இதனை அப்பொழுதே வெளிப்படுத்தியதுண்டு.

பா.ஜ.க. செயற்குழுக் கூட்டத்தில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள், தளபதிகள் கலந்துகொண்டு விளக்கம் அளித்த தையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

96 ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்க் கப்பட்டது ஏன் என்பது இப்பொழுது மகாராட்டிரத்தில் - வெடி குண்டு வழக்கில் இராணுவ அதிகாரிகள் மூவர் சம்பந்தப்பட்டதி லிருந்து தெரிந்துகொள்ளலாமே!

மகாராட்டிர மாநிலம் மலேகானில் குண்டுவெடித்த அதே நாளில் குஜராத் மாநிலம் மாடேகாவிலும் குண்டுவெடித்தது. இரண்டும் ஒரே ரகத்தைச் சேர்ந்தவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இதற்குமுன் நடைபெற்ற அனைத்துக் குண்டுவெடிப்பு களின் பின்னணியில் சங் பரிவார்க் கும்பல் பெரும்பாலும் இருந்திருக்க வாய்ப்பு உண்டு என்று கருதப்படுகிறது.

இராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் பயிற்சி நிலையங் களையும், தொழிற்சாலைகளையும் வைத்து திட்டமிட்ட வகையில் இந்தக் கும்பல் செயல்பட்டதைப் பார்க்கும்பொழுது இந்த அபாயகரமானவர்கள் நாடு முழுவதும் வெடிகுண்டு வேலையை அரங்கேற்றுபவர்கள் என்பது எளிதில் விளங்கிவிடும்.

சூரத் நகரில் வெடிகுண்டு சேதத்தைப் பார்வையிட நரேந்திர மோடி வந்தபோது, பாதையில் மரங்களில் வைக்கப்பட்டிருந்த 18 வெடிகுண்டுகளைக் காவல்துறையினர் கண்டுபிடித்து எடுத் தனர். வைத்ததே அவர்களாகவே இருக்கக்கூடும் என்கிற அய்யம் நியாயமானதே!

சங் பரிவார்க் கும்பல் இப்படியெல்லாம் வன்முறைக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்ய தொழிற்சாலை களையெல்லாம் வைத்துச் செயல்படும் பயங்கரமான தகவல்கள் அம்பலத்திற்கு வந்து கொண்டேயிருக்கின்றன. வழக்கம்போல் எங்கள்மீது அபாண்ட பழி என்று கூறி கூக்குரல் போடுகிறார்கள் சங் பரிவார் மற்றும் பா.ஜ.க.வினர்.

இந்த யோக்கியதையில் உள்ள ஒரு கூட்டம் சிறுபான்மை யினர்மீது வன்முறை முத்திரை குத்தி அவர்களுக்கு எதிரான வெறுப்பினைத் தூண்டும் ஒரு வேலையில் திட்டமிட்ட முறையில் இறங்கியுள்ளது என்பதுதான் உண்மை. இதுபோலவே ஒரிசாவிலும் கிறித்தவர்கள்மீது பழி - படுகொலைகள்.

நடவடிக்கைகள் தேவை

மத்திய - மாநில அரசுகள் இந்த அமைப்புகளைப் பயங்கரவாத அமைப்பு என்ற பட்டியிலில் வைத்து சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகளை உடனடியாகச் செய்யாவிட்டால், நாடு பெரும் விலையைக் கொடுக்கவேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறோம்.

சென்னை
28.10.2008


தலைவர்,
திராவிடர் கழகம்.

குறிப்பு: இவ்வறிக்கை துண்டறிக்கையாகவும் கிடைக்கும்; வாங்கி ஊர்தோறும் பரப்புங்கள்.